Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஒரு மாதம் தான் ஆகுது…. புது மாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு… மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

சேலம் மாவட்டத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக கணவன் தூக்குப்போட்டு  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள மாமாங்கம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்தார். கார் டிரைவராக பணி புரிந்த இவர் பிரதிக்சா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி ஒரு மாதம் ஆகிய நிலையில் பிரதிக்சா கணவரிடம் கோபித்து கொண்டு அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மன வேதனை அடைந்த மணிகண்டன் வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மணிகண்டனின் பெற்றோர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |