Categories
உலக செய்திகள்

மியான்மரில் நடந்த பயங்கரமான தாக்குதல்.. காவல்துறை-இராணுவம் அதிரடி சோதனை..!!

மியான்மரின் விமானதளங்களில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மியான்மரின் மத்திய நகரம் மாக்வேக்கு அருகில் இருக்கும் விமானத்தளத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் ஒரு தாக்குதலும், தொடர்ந்து மேலும் 2 தாக்குதலும் நடத்தப்பட்டதாக டெல்டா செய்தி நிறுவனம், செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இதில் மியான்மர் விமானப் படையில் உள்ள வீரர்கள் ஆறு பேர் உயிரிழந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர், பிராந்தியத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் சாலைகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து சோதனை நடத்திவருகின்றனர். இதில் நிறுத்தாமல் செல்லும் வாகனங்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் தற்போது இருவர் வாகனத்தை நிறுத்தாமல் சென்று, ராணுவத்தினரால் துப்பாக்கி சூடு பட்டு காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |