ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா இன்று தனது பிறந்தநாளை கேக் வெட்டி மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது . அந்த வகையில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் ரோஜா . இந்த சீரியலில் சிப்பு கதாநாயகனாகவும், பிரியங்கா கதாநாயகியாகவும் நடித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் இந்த சீரியலின் கதாநாயகி பிரியங்காவுக்கு இன்று பிறந்தநாள். அவருக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் தனது பிறந்தநாளை கேக் வெட்டி மகிழ்ச்சியாக கொண்டாடிய புகைப்படத்தை பிரியங்கா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . தற்போது இந்த அழகிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது .