Categories
தேசிய செய்திகள்

உறுதி செய்யப்பட்ட தொற்று…. சிகிச்சைக்கு முன் பிரதமருக்கு கடிதம்…. சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய மன்மோகன் சிங்….!!

கொரோனா சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. அதன்பின் அவர் உடனடியாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறப்பு மருத்துவ வல்லுனர்கள் குழு கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் குணமடைந்து தற்போது வீடு திரும்பியுள்ளார். முன்னதாக மன்மோகன் சிங் தனது இரண்டு டோஸ் தடுப்பூசிகளை ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

அதில் முதலாவது போஸ் மார்ச் 4ஆம் தேதியும் இரண்டாவது டோஸ் ஏப்ரல் 3ஆம் தேதியும் எடுத்துக் கொண்டுள்ளார். பின்னர் மருத்துவமனைகளில் சேருவதற்கு முன்பு மன்மோகன் சிங் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் 5 முக்கிய அம்சங்களை வலியுறுத்தியுள்ளார். அது என்னவென்றால் தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்த வேண்டும், தடுப்பூசி போடுவதை போடும் வயதை குறைக்க வேண்டும் ஆகியவற்றிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். மேலும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையில் ஆபத்தான பிடியில் இந்தியா சிக்கியுள்ளதாகவும் அவர் அதில் தெரிவித்திருந்தார்.

Categories

Tech |