Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கொரோனா சிகிச்சை அறைக்குள்…. அடித்துப்பிடித்து ஓடிய கூட்டம்…. அசால்ட்டாக பிடித்த தீயணைப்பு துறையினர்….!!

நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை அறைக்குள் பாம்பு புகுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு மையம் செயல்பட்டு வருகின்றது. இதில் 100 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 6 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று கொரோனா  சிறப்பு அறைக்குள் புகுந்துள்ளது. இதனால் அங்கு சிகிச்சையில் இருந்தவர்கள் அடித்துப் பிடித்து வெளியே ஓடியுள்ளனர்.

இதனையடுத்து அவர்களை கொரோனா சிகிச்சை அறைக்குள் அனுமதிக்காமல் வெளியில் நிறுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 6 அடி நீளமுள்ள அந்த பாம்பை பிடித்து, தமிழக ஆந்திர எல்லை பகுதியில் இருக்கின்ற காப்புக்காட்டில் கொண்டுபோய் விட்டுள்ளனர்.

Categories

Tech |