பிரிட்டன் அரச குடும்பத்தின் நிபுணர், இளவரசர் ஹரி ஓபராவுடனான நேர்காணலை நினைத்து கவலையடைந்துள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
பிரிட்டன் அரசகுடும்பத்தின் நிபுணரான Duncan Larcombe இளவரசர் ஹரி பற்றி கூறியுள்ளதாவது, ஹரிக்கு சட்டென்று கோபமடையும் குணம் உண்டு. ஒரு முறை நாங்கள் (ஹரி, வில்லியம், Duncan) ஒன்றாக இணைந்து மதுபானம் அருந்தியபோது ஒரு விஷயத்திற்காக ஹரி திடீரென்று கோபம் அடைந்தார்.
அதன் பிறகு வில்லியம் நடந்தவற்றை விளக்கியவுடன், உடனடியாக ஹரி மன்னிப்பு கேட்டார். அதே பழக்கம் தான் ஓபரா நேர்காணலில் தெரிந்தது என்று கூறுகிறார். அதாவது அரச குடும்பத்தில் மேகன் சந்தித்த பிரச்சனைகள் தான் ஹரியை கோபமடையச் செய்துள்ளது. அதனால் தான் நேர்காணலில் பல கருத்துக்களை கூறி விட்டு அதன் பின்பு வீட்டுக்கு சென்றவுடன் ஹரி வருத்தமடைந்திருப்பார் என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே மேகன் அமெரிக்காவில் தன் கனவு வாழ்க்கையை அனுபவித்து வருகிறார். இந்த இரு உலகத்திற்கும் இடையே மாட்டிக்கொண்டு ஹரி தடுமாற்றம் அடைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஹரி மிக கடுமையான பயணம் ஒன்றை மேற்கொண்டிருக்கிறார். மேலும் கடினமான சமயங்களை சந்திக்க வேண்டியுள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும் ஜூலை மாதம் முதல் தேதியன்று டயானாவின் சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. ஆனால் இதற்கு முன்பே அவர் பிரிட்டன் வந்திருந்தபோது அரச குடும்பதில் சிலரால் புறக்கணிக்கப்பட்டார். எனவே தன் மனைவியின் இரண்டாம் பிரசவத்தை காரணமாகக் கூறி அவர் பிரிட்டன் வருவதை தவிர்க்கலாம் என்றும் தெரிவித்திருக்கிறார்.