நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் 600 ரூபாயக்கும், தனியார் மருத்துவமனைகளில் 1200க்கும் விற்பனை செய்யப்படும் என பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில் மாநிலங்களுக்கான கோவாக்சின் தடுப்பூசி விலை ஒரு டோஸ் ரூ.600 இலிருந்து ரூ.400க்கு குறைந்துள்ளது. கோவாக்சின் தடுப்பூசி விலை உயர்வுக்கு பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ரூ.200 விலை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் தனியார் மருத்துவமனைகளுக்கு ஏற்கனவே நிர்ணயித்த ரூ.1200 என்ற விலையில் மாற்றமில்லை என பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.