டி காக்-யின் அதிரடி ஆட்டத்தால் , 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி, மும்பை அணி வெற்றியை கைப்பற்றியது .
ஐ.பி.எல் தொடரின் , இன்று 2 போட்டிகள் நடைபெறுகிறது .இதில் முதல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின . இந்த போட்டி டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில், நடைபெற்றது . இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி , பீல்டிங்கை தேர்வு செய்தது.இதனால் ராஜஸ்தான் அணி பேட்டிங்கில் களமிறங்கியது .தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்டலர் – ஜெய்ஸ்வால் களமிறங்கினர் . ஜோஸ் பட்டலர் 41 ரன்களை எடுத்து ஆட்டமிழக்க அடுத்து சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்தார் .இதன் பிறகு ஜெய்ஸ்வால் 32 ரன்களில் வெளியேற ,அடுத்தாக ஷிவம் துபே களமிறங்கினர் .இதில் சஞ்சு சாம்சன் 42 ரன்களும் , ஷிவம் துபே 35 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க , இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 171 ரன்களை குவித்தது.
172 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு மும்பை அணி களமிறங்கியது .தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா – டி காக் ஜோடி களமிறங்கியது .தொடக்கத்திலிருந்தே டி காக் அதிரடி காட்டினார். இதில் ரோஹித் சர்மா 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க ,அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் 16 ரன்களில் ஆட்டமிழந்தார் .இந்த 2 விக்கெட்டுகளையும் கிறிஸ் மோரிஸ் வீழ்த்தினார் . அடுத்தாக குர்னால் பாண்டிய 39 ரன்கள் எடுத்து வெளியேற , இறுதியில் பொல்லார்ட் களமிறங்கினார். இறுதிவரை அட்டமிழக்காமல் ஆடிய டி காக் 70 ரன்களும் ,பொல்லார்ட் 16 ரன்கள் எடுக்க, இறுதியாக மும்பை அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது .