Categories
மாநில செய்திகள்

10 வருடங்களுக்கு பின்…. மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி…. ஏபிபி- சிவோட்டர் கருத்துக்கணிப்பு…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. மக்களும் தங்களுடைய வாக்கினை செலுத்தினர். இதையடுத்து தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தததையடுத்து வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன.

அந்தவகையில் ஏபிபி- சிவோட்டர் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. இதில் திமுக கூட்டணி கட்சிகள் 166 இடங்களிலும், அதிமுக கூட்டணி கட்சிகள் 64 இடங்களிலும், அமமுக- 1  இடத்திலும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 1 இடத்திலும், மற்றவை 2 இடங்களிலும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

 

Categories

Tech |