நீலகிரி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை மேம்படுத்த திமுக சார்பில் 10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் கனமழை பாதிக்கப்பட்ட இடங்களில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் இரண்டாவது நாளாக ஆய்வு செய்து , பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார். பின்னர் எமரால்ட் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் ,இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக ராஜா தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் 3 கோடி ரூபாயை வெள்ள மேம்பாட்டுக்காக நிதிக்காக ஒதுக்க இருக்கின்றார்.
அதே போல இங்குள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் திராவிடமணி அவரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 2 கோடியை ரூபாயை ஒதுக்குவதாக அறிவித்திருக்கிறார். திமுகவின் ராஜ சபை உறுப்பினர்கள் சிவா, டிகேஎஸ் இளங்கோவன், பாரதி, வில்சன் மற்றும் சண்முகம் ஆளுக்கு ஒரு கோடி ரூபாய்யை இந்த வெள்ள நிவாரண நிதியாக ஒதுக்கியுள்ளனர். மொத்தமாக நீலகிரி மாவட்ட மேம்பாட்டிற்க்காக திமுக சார்பில் 10 கோடி ரூபாய்யை உடனடி மேம்பாட்டு பணிகளுக்கும் , நிவாரணப் பணிகளுக்கு பயன்படுத்தப்படக் கூடிய வகையில் இருக்கிறது என்று தெரிவித்தார்.