Categories
உலக செய்திகள்

பேருந்தில் சிறுவன் அருகில் உட்கார்ந்த திருடன்…. திருட்டுத்தனத்தை கண்டுபிடித்ததால் சிறுவனுக்கு நேர்ந்த சோகம்…. காவல்துறையினர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்….!!

லண்டன் பேருந்தில் 16 வயது சிறுவனின் மீது தாக்குதல் நடத்திய நபரின் தகவல்கள் வெளியாகியுள்ளது.

லண்டனில் கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி இரவு 8 மணிக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த 16 வயது சிறுவன் அருகில் வந்து உட்கார்ந்த திருடன் சிறுவனின் பாக்கெட்டில் கைவிட்டு திருட முயற்சித்துள்ளார். அதை உணர்ந்த சிறுவன் பாக்கெட்டிலிருந்து கை எடுக்குமாறு கூறியதால் அவன் முகத்தில் தொடர்ந்து குத்தி விட்டு பேருந்தில் இருந்து இறங்கி ஒடி சென்றுள்ளான்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சிறுவனை குத்திய நபரின் வயது 17 கடந்து இருக்கலாம் என்றும் அவன் என் உயரம் 5 அடி முதல் 7 அடி இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் அன்று அவன் கருப்பு நிற உடை அணிந்திருந்தான் என்றும் அவனின் சிசிடிவி புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அவன் குறித்த தகவல்கள் தெரிந்தால் உடனடியாக காவல் துறையினரிடம் தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |