25 வது லீக் போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதல்.
2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 25 வது லீக் போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன . இந்த போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில், இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது . இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி , பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இதனால் கொல்கத்தா அணி பேட்டிங்கில் களமிறங்கியது .தொடக்க வீரர்களாக நிதிஷ் ரானா – ஷுப்மன் கில் களமிறங்கினர் .இதில் நிதிஷ் ரானா12 பந்துகளில் ,15 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க , அடுத்து ராகுல் திரிபாதி களமிறங்கினர் . ஷுப்மன் கில் 26 பந்துகளில் 3 பவுண்டரி ,1 சிக்ஸர் அடித்து 32 ரன்களை எடுக்க ,ராகுல் திரிபாதி 10 ரன்கள் எடுத்துள்ளார் .8 ஓவரில் கொல்கத்தா அணி 1 விக்கெட்டை இழந்து 58 ரன்களை குவித்துள்ளது .