பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா தடுப்பூசி 663 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 30 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசியும், 633 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும் என மொத்தம் 663 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 1,539 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசியும், 31 ஆயிரத்து 122 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும் என மொத்தம் 32 ஆயிரத்து 661 பேருக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.