கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அவசர உதவிக்கு இந்த எண்ணை வாட்ஸப்பில் அழைக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து தரப்பு மக்களும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்படியும் தேவைகளுக்கு மட்டும் வெளியே வருமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த வைரஸ் தொற்றால் கர்ப்பிணி பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
தற்போது இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்படும் மருந்துகள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஒருவேளை கர்ப்பிணி பெண்களுக்கு தொற்று ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு சிரமமாக இருக்கும். அதனால் அவர்களும் அவர்களது குழந்தையும் பாதிக்க நேரிடும். இதனால் அவசர உதவி வேண்டும் என்றால் வாட்ஸப்பில் 9354954224 என்ற நம்பரை உதவிக்கு அழைக்கலாம் என தேசிய மகளிர் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது