25 வது லீக் போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதல்.
2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 25 வது லீக் போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன . இந்த போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில், நடைபெற்று வருகிறது . இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி , பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இதனால் கொல்கத்தா அணி பேட்டிங்கில் களமிறங்கியது .தொடக்க வீரர்களாக நிதிஷ் ரானா – ஷுப்மன் கில் களமிறங்கினர் .இதில் நிதிஷ் ரானா12 பந்துகளில் ,15 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க , அடுத்து ராகுல் திரிபாதி களமிறங்கினர் . இதில் 9.3 ஓவரில் ராகுல் திரிபாதி 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் .
அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் மோர்கன் மற்றும் சுனில் நரேன் இருவரும் 0 ரன்னில் வெளியேறினர் .அடுத்ததாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷுப்மன் கில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் .இதனால் கொல்கத்தா 15 ஓவரில் 95 ரன்கள் எடுத்து ,5 விக்கெட்டை இழந்து தடுமாறுகிறது .