Categories
Uncategorized

பிரான்ஸ் மக்களை தாக்க முயன்ற திட்டம்…. மூவர் கும்பலை கைது செய்த காவல்துறையினர்…. தீவிரவாதிகளாக இருக்கலாம் என சந்தேகம்….!!

ஸ்பெயினில் பிரான்ஸ் மக்களை குறி வைத்து தாக்க திட்டமிட்ட இருந்த மூவர் கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஸ்பெயின் நாட்டில் பிரான்ஸ் குடிமக்களை தாக்க திட்டமிட்டிருந்த தீவிரவாத கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் Granada-வில் இடம்பெற்ற ஜிகாதி தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். அவர்கள் குடியிருப்பில் இருந்தபோது சோதனை நடத்தப்பட்டதை தொடர்ந்து 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்னர்.

மேலும் காவல்துறை அதிகாரி கைது செய்யும்போது எடுத்த முழு வீடியோவும் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் காவல்துறையினர் குடியிருப்புக்குள் ஆயுதங்களுடனும், மோப்ப நாய்களுடன் நுழைகின்றனர்.இதனை தொடர்ந்து அந்த குடியிருப்பில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தையும் கொண்டு செல்கின்றனர். அதன்பின் ஒருவர் பின் ஒருவராக மூன்று பேரை காரில் ஏற்றி அழைத்து வருகின்றனர்.

Categories

Tech |