திண்டுக்கல்லில் நேற்று அதிகாலையில் அரசு அதிகாரி ஒருவர் காரில் எரிந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர்.எம்.காலனி பகுதியில் ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரியான குப்புசாமி (68) வசித்து வந்தார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் மருத்துவர்களாக வெளியூரில் வேலை பார்த்து வருவதால் குப்புசாமி அவரது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் நேற்று அதிகாலையில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. அந்த சத்தத்தை கேட்ட அவரது மனைவி வெளியில் வந்து பார்த்தபோது அவருடைய கணவர் குப்புசாமி எரிந்த நிலையில் காரில் பிணமாக கிடந்துள்ளார். அதனை கண்டு அதிர்ச்சி அவருடைய மனைவி அதிர்ச்சி அடைந்தார். இதற்கிடையே தீயணைப்புத் துறையினருக்கு இந்த விபத்து குறித்து தகவல் அளிக்கப்பட்டது.
மேலும் அக்கம்பக்கத்தினர் தண்ணீரை காரின் மீது ஊற்றி தீயை அணைத்தனர். அதன்பிறகு காருக்குள் இருந்த டிரைவர் கரிக்கட்டையாக மீட்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த வந்த நகர் மேற்கு காவல்துறையினர் அங்கு விசாரணை மேற்கொண்டனர். மேலும் எதற்காக குப்புசாமி அதிகாலை நேரத்தில் காருக்கு சென்றார் ? விபத்து மூலம் தான் உயிரிழந்தாரா ? இல்லை வேறு யாராவது அவரை வரவழைத்து கொலை செய்தார்களா ? என பல கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.