ஆண்ட்ரே ரசல் 45 ரன்கள் மற்றும் ஷுப்மன் கில் 43 ரன்கள் எடுக்க ,இறுதியில் கொல்கத்தா அணி 154 ரன்களை குவித்துள்ளது .
14 வது ஐ.பி.எல் தொடரின் , 25 வது லீக் போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன . இந்த போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில், நடைபெற்று வருகிறது . இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி , பீல்டிங்கை தேர்வு செய்ததால் , கொல்கத்தா அணி பேட்டிங்கில் களமிறங்கியது .தொடக்க வீரர்களாக நிதிஷ் ரானா – ஷுப்மன் கில் களமிறங்கினர் .இதில் நிதிஷ் ரானா 15 ரன்கள் மற்றும் அடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாதி 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர் .
அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் மோர்கன் மற்றும் சுனில் நரேன் இருவரும் 0 ரன்னில் வெளியேறினர் .இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷுப்மன் கில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் .இதன் பிறகு களமிறங்கிய ஆண்ட்ரே ரசல் அட்டமிழக்காமல் ,27 பந்துகளில் 45 ரன்களை குவிக்க , தினேஷ் கார்த்திக் 11ன் ரன்னில் வெளியேறினார் .இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்களை குவித்துள்ளது .அடுத்து களமிறங்கியுள்ள டெல்லி அணி 155 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடி வருகிறது .