Categories
மாநில செய்திகள்

10 வருடத்திற்கு பிறகு மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி?…. வெளியான கருத்துக்கணிப்பு….!!!!

தமிழகத்தில் 160 முதல் 172 வரையிலான தொகுதிகளை திமுக கைப்பற்றுகிறது என்று ஏபிபி – சி ஓட்டர் நடத்திய கருத்து கணிப்பில் தகவல் தெரியவந்துள்ளது.

தமிழக தேர்தலுக்கு முடிவு தெரிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தனியார் அமைப்புகள் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அந்தவகையில், ஏபிபி – சி ஓட்டர் நடத்திய கருத்து கணிப்பில், 160 முதல் 172 வரையிலான தொகுதிகளை திமுக கைப்பற்றுகிறது என்றும் 10 வருடத்திற்கு பிறகு மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.
அதேபோல ரிப்பளிக்- சிஎன்.எக்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் திமுகவுக்கு 160 முதல் 170 இடங்களும் அதிமுக கூட்டணிக்கு 58 முதல் 68 இடங்களும் பிறகட்சிகளுக்கு 4 முதல் 6 தெகுதிகளும் கிடைக்கும் என தெரியவந்துள்ளது.

Categories

Tech |