சிஎஸ்கே அணி இளம் வீரரான ருதுராஜ் கெய்ட்வாட்டை ,முன்னாள் இந்திய வீரரான சேவாக் பாராட்டி பேசியுள்ளார் .
கடந்த சீசன் ஐபிஎல் போட்டியில் ,சிஎஸ்கே அணி ‘ப்ளே ஆப் ‘ சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. ஆனால் தற்போது நடப்பு சீசனில் ,இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சிஎஸ்கே அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக சிஎஸ்கே தொடக்கதில் , ஒரு சில போட்டிகளில் சொதப்பி வந்த ருதுராஜ் , தற்போது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் . அவர் கடைசியில் ஆடிய 3 போட்டிகளிலும் ,தொடக்க வீரராக களமிறங்கி அதிக ரன்களை குவித்துள்ளார். இதுபற்றி முன்னாள் இந்திய அணியின் வீரரான சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.
சிஎஸ்கே அணியில் இடம்பெற்றிருக்கும் ருதுராஜ் ,அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார் . இதே நிலையை அவர் தொடர்ந்தால் , நிச்சயம் ஓரிரு ஆண்டுகளில் சிஎஸ்கே அணிக்கு, கேப்டனாக தலைமை தாங்குவார் என்று சேவாக் கூறியுள்ளார். அவர் பேட்டிங்கில் களம் இறங்கும் போது இக்கட்டான நேரத்திலும் பொறுமையுடன் கையாண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். இதனால் ருதுராஜ் சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டனாக வருவதற்கு அனைத்து தகுதிகளும் உள்ளது என்று சேவாக் ,ருதுராஜை பாராட்டிப் பேசியுள்ளார்.