இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது.
எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை நிலவரம் உறைய வைக்கிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியிலேயே ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.
இதனால் கொரோனாவால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இருப்பினும் கொரோனா கட்டுக்குள் வந்தபாடில்லை. இந்நிலையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதை பாகிஸ்தானை சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்த ரமலான் அன்று நமது அண்டை வீட்டாருக்கு(நாட்டாருக்கு) பிரார்த்திப்போம் என்று தன் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதை நெட்டிசன்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.