நான் தினமும் வேகமாக சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை அதிக அளவு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அதில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால் சாப்பிடும் போது மிக கவனமாக சாப்பிட வேண்டும். சிலருக்கு பல வேலைகள் இருப்பதால் வேகமாக சாப்பிடுவது வழக்கம். அவ்வாறு சாப்பிடுவது மிகவும் ஆபத்தானது.
உடல் எடை குறித்த விழிப்புணர்வு பலருக்கு அதிகரித்துள்ளது. இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட உணவுகள் மட்டும் உடற்பயிற்சி என உடல் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது. ஆனால் என்ன உணவு சாப்பிடுகிறீர்கள் என்பதை விட, சரியான நேரத்தில் சாப்பிடுவது முக்கியம் என்று பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. மேலும் வேகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அது உடல் எடை அதிகரிக்கும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.