Categories
கிரிக்கெட் விளையாட்டு

DC VS KKR : அதிரடி காட்டிய பிரித்வி ஷா…! 7 விக்கெட் வித்தியாசத்தில்…டெல்லி அணி அபார வெற்றி..!!!

பிரித்வி ஷா , ஷிகர் தவானின்  அதிரடியால் , 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றது .

நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற  , 25 வது லீக் போட்டியில்,  டெல்லி கேப்பிட்டல்ஸ் –  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள்  மோதின . இதில் டாஸ் வென்ற  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி , பீல்டிங்கை  தேர்வு செய்ததால் , கொல்கத்தா அணி பேட்டிங்கில் களமிறங்கியது .தொடக்க வீரர்களாக நிதிஷ் ரானா – ஷுப்மன் கில் களமிறங்கினர் .இதில் நிதிஷ் ரானா 15 ரன்கள் மற்றும் அடுத்து களமிறங்கிய  ராகுல் திரிபாதி  19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்  .அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் மோர்கன் மற்றும் சுனில் நரைன் இருவரும் 0 ரன்னில்   வெளியேறினர் .

இதில்  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷுப்மன் கில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் இதன் பிறகு களமிறங்கிய ஆண்ட்ரே ரசல் அட்டமிழக்காமல் ,27 பந்துகளில் 45 ரன்களை குவிக்க , இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவரில்  6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்களை குவித்தது .அடுத்து களமிறங்கிய டெல்லி அணி 155 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது .தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா – ஷிகர் தவான்  ஜோடி களமிறங்கினர்  .

தொடக்கத்திலிருந்தே இருவரின் பாட்னர்ஷிப் , சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இதில் ஷிகர் தவான் 46 ரன்களில் வெளியேறும்போது, டெல்லி அணி 132 ரன்கள் எடுத்திருந்தது. இதன்பிறகு களம் இறங்கிய கேப்டன் ரிஷப் பண்ட், பிரித்வி ஷாவுடன் ஜோடி சேர்ந்தார். இதில் பிரித்வி ஷா 82 ரன்கள், ரிஷப் பண்ட்  16 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க , இறுதியாகக் டெல்லி அணி 16.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் டெல்லி அணி புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தை கைப்பற்றியது.

Categories

Tech |