Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் இவ்ளோ பேருக்கா..? அதிகரித்து வரும் பாதிப்புகள்… கொரோனாவின் கோர தாண்டவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 106 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 106 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 85 பேருக்கு சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக சிங்கம்புணரி, சிவகங்கை, தேவகோட்டை, மானாமதுரை, காரைக்குடி, திருப்பத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொற்று அதிகரித்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமங்களில் 600 பேர் தற்போது கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 64 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Categories

Tech |