Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பொது அமைதிக்கு பங்கம் ஏற்படக்கூடாது…. காவல்துறையினர் பரிந்துரை…. கலெக்டர் அதிரடி உத்தரவு….!!

நெல்லையில் காவல்துறையினர் வாலிபரை குண்டாசில் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் மானூரில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் கங்கைகொண்டான், மானூர், தாழையூத்து போன்ற பகுதிகளில் அமைந்திருக்கும் காவல் நிலையத்தில் பொதுமக்களை அச்சுறுத்தல், அடிதடி கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளது. இதனால் காவல்துறையினர் பொது அமைதிக்கு பங்கத்தை விளைவிக்காமலிருக்க வடிவேலுவை குண்டாசில் கைது செய்ய கலெக்டரிடம் நெல்லை மாவட்டத்தினுடைய காவல்துறை சூப்பிரண்டான மணிவண்ணன் பரிந்துரை செய்தார். இதன்பேரில் கலெக்டர் வடிவேலுவை குண்டாசில் கைது செய்ய உத்தரவிட்டார். இதனால் காவல்துறையினர் அவரை குண்டாசில் கைது செய்ததோடு மட்டுமல்லாமல் பாளையங்கோட்டை சிறையிலும் அடைத்தனர்.

Categories

Tech |