நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. இந்நிலையில் அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமன்றி கொரோனாவால் பாதிக்கப்பட்ட தற்போது வரை திரை பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் பிரபல திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் (54) சற்றுமுன் காலமானார். கொரோனா பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சற்று முன் உயிரிழந்தார். இவர் அயன், மாற்றான், கவன், காப்பான், கோ, அனேகன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.இவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
அந்தவகையில் கே.வி ஆனந்த் மறைவிற்கு கமலஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். “பத்திரிகைகளில் புகைப்பட கலைஞராக கே.வி ஆனந்தின் வாழ்க்கை தொடங்கியது. மனம் தளராத தன் முனைப்பினால் தன்னை ஒரு சிறந்த ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் நிலைநிறுத்திக் கொண்டவர். அவருடைய மறைவு சினிமாவிற்கு பேரிழப்பு” என்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.