Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அரிவாளால் தாக்க வந்த வாலிபர்கள்…. மடக்கிப் பிடித்த காவல்துறையினர்…. நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லையில் 2 நபர்கள் காவல்துறையினரை அரிவாளைக் கொண்டு தாக்க முயன்றதால் அவர்களை கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்தில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காரை மறித்து சோதனை செய்ததோடு மட்டுமல்லாமல் அதனுள் இருந்த 7 நபர்களிடம் விசாரணையையும் மேற்கொண்டனர். ஆனால் அவர்கள் முன்னுக்கு பின்னாக பேசியதோடு மட்டுமல்லாமல் காவல்துறையினரிடம் அவதூறாகவும் பேசியுள்ளார்கள்.

மேலும் காரில் வைத்திருந்த அரிவாளைக் கொண்டு காவல்துறையினரை தாக்க முயன்று அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். ஆனால் அவர்களை விடாது துரத்தி 2 நபர்களை மடக்கிப்பிடித்தனர். அதில் அவர்கள் ராஜவல்லிபுரத்தை சேர்ந்த மகாதேவன் மற்றும் ஹரிஹரன் என்பது கண்டறியப்பட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய 5 நபர்களை தேடி வருகின்றனர்.

Categories

Tech |