அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட வேண்டும் என்று மாவட்ட காஜிகள் தலைமையில் வலியுறுத்தப்பட்டுள்ளது .
தமிழகத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியதில் இருந்து தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு முழுவதும் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல் படுத்தியது. இதனையடுத்துக் கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் இரண்டாவது அலையாகப் கொரோனா வைரஸ் பரவி வருகின்றது. இதனால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் மூட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு மீண்டும் வாரம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் ராமநாதபுரத்திலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்ட காஜிகள் கூட்டமைப்பு சார்பில் காஜி சலாஹுதீன் ஜமாலி தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை முறையாக பின்பற்றி பிற மாவட்டங்களில் இருந்தும் மற்ற மாவட்டங்களுக்கு செல்வதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் பெரும்பாலான ஊர்களில் உள்ள வழிபாட்டுத் தலங்களுக்கும் பொதுமக்கள் சென்று சமூக இடைவெளியை பின்பற்றி, முக கவசம் அணிந்து, வழிபாடு செய்கின்றனர். மேலும் கொரோனா விதி முறையை பின்பற்றி டாஸ்மார்க் கடை, பேருந்துகள் மற்றும் ஜவுளி கடைகள் போன்றவற்றிற்கு அரசு அனுமதியுடன் செயல்பட்டு வருகின்றன. இதனைப் போலவே தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களையும் திறப்பதற்கு அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் மாவட்ட காஜிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .