Categories
உலக செய்திகள்

நிமிடத்திற்கு 500 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் இயந்திரம்….. இந்தியாவுக்கு அனுப்பப்படும்…. அறிவிப்பு வெளியிட்ட பிரபல நாடு….!!

பிரிட்டன் மிகப்பெரிய ஆக்சிஜன் உற்பத்தி எந்திரங்களை இந்தியாவுக்கு அனுப்புகிறோம் என அறிவித்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு போன்ற பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் பிரிட்டன் தன் நாட்டின் நிலை குறித்து கூறி எங்களால் தடுப்பூசி அனுப்ப இயலாது என கூறியது. ஆனால் மற்றொரு வடிவில் இந்தியாவுக்கு உதவ வேண்டும் என்பதற்காக ஆக்சிஜன் உற்பத்தி எந்திரங்களை இந்தியாவுக்கு அனுப்புகிறோம் என அறிவித்துள்ளது. இந்த ஆக்சிஜன் தொழிற்சாலை எந்திரங்கள் நிமிடத்திற்கு 500 லிட்டர் திரவ ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் என்றும் இது கண்டைனர் அளவிற்கு பெரியதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் 495 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளையும் 200 வென்டிலேட்டர்களையும் அனுப்புகிறோம் எனவும் தெரிவித்துள்ளது. இந்த உதவிகள் இந்தியாவை வந்து சேர எவ்வளவு காலம் ஆகும் என்பதை குறிப்பிடவில்லை.

Categories

Tech |