இயக்குனர் ஏ.எல்.விஜய் தனது மனைவி மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் இயக்குனர் ஏ.எல்.விஜய் கிரீடம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் தெய்வத்திருமகள், மதராசபட்டினம், தலைவா, சைவம் உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்தார். தற்போது இவர் நடிகை கங்கனாவை வைத்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு படமான தலைவி படத்தை இயக்கியுள்ளார் .
இயக்குனர் விஜய் நடிகை அமலா பாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். இதையடுத்து இயக்குனர் விஜய் ஐஸ்வர்யா என்கிற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த வருடம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தனது மனைவி மற்றும் மகனுடன் இயக்குனர் விஜய் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.