பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் கேட்டின் 10 ஆவது திருமண நாளிற்கு ஹரி-மேகன் தம்பதி ரகசியமாக வாழ்த்து கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் அவரின் மனைவி கேட் தம்பதிக்கு நேற்று திருமண நாளாகும். தங்களின் பத்தாவது திருமணநாளை கொண்டாடிய இத்தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்துவந்தது. நேற்று அனைத்து இணையதள பக்கங்களிலும் வில்லியம் மற்றும் கேட்டின் புகைப்படங்கள் தான் நிறைந்து காணப்பட்டது.
எனினும் இளவரசர் வில்லியமின் சகோதரர் ஹரி மற்றும் அவரின் மனைவி மேகன் இருவரும் வாழ்த்து கூறவில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் ஹரி-மேகன் தம்பதி வில்லியம் மற்றும் கேட்டிற்கு தனியாக வாழ்த்து கூறியதாக அவர்களின் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.