பிரித்தானியாவை அதிர வைத்த சீரியல் ரேப்பிஸ்ட் வழக்கில் மேலும் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர்.
பிரித்தானியாவுக்கு இந்தோனேசியாவிலிருந்து மேற்படிப்பிற்காக வந்த ரெய்னர்ட் சினேகா மத்திய மான்செஸ்டர் பகுதியில் ஒரு குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். மேலும் அவர் கடந்த 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட நாளில் தனது வீட்டிற்கு சுமார் 159 ஆண்களை கடத்தி வந்து பாலியல் வன்கொடுமைகளை செய்துள்ளார். இதை கடந்த 2018-ஆம் ஆண்டு கண்டுபிடித்த காவல்துறையினர் அவரை பிடித்ததோடு அவருடைய வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து சோதனை செய்ததில் ஏதேனும் பப் அல்லது பார்களில் இருந்து வெளியே வரும் ஆண்களை அவர் கடத்தி வந்தது தெரியவந்தது.
மேலும் அவருடைய செல்போனில் சோதனை செய்த போது அதிலிருந்து வீடியோக்கள் காவல்துறையினரை அதிர வைத்தது. சினேகா போதை பொருள் கொடுத்து ஆண்கள் அனைவரையும் கடத்திவந்து அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோவாக செல்போனில் பதிவு செய்து வந்துள்ளார். அந்த வீடியோக்கள் சுமார் 3 டெர்ராபைட் அளவிற்கு இருந்துள்ளது. இந்த வழக்கு பிரித்தானியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் அவர் இதுவரை 159 ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆனால் காவல்துறையினர் அவன் சுமார் 206 ஆண்களை இவ்வாறு செய்திருக்கக்கூடும் என்று கூறியுள்ளனர். அவன் “பிரிடன்ஸ் மோஸ்ட் ப்ரோலிபிக் ரேப்பிஸ்ட்” என்று பிரித்தானியாவில் அழைக்கப்படுகிறான். தற்போது சினேகா சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில் மேலும் 23 பேர் அவனால் பாதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் அவர் மீது யாரும் வழக்கு தொடர விரும்பவில்லை. மேலும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ள 40 ஆண்டு சிறை தண்டனையே அவனுக்கு சரியானதாக இருக்கும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.