தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. மக்களும் தங்களுடைய வாக்கினை செலுத்தினர். இதையடுத்து தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தததையடுத்து வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை மே இரண்டாம் தேதி என்ன தடை இல்லை என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வாக்கு எண்ணும் பணியை நிறுத்த கோரிய புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியின் மனு தள்ளுபடி செய்யப்படும். விளம்பரத்திற்காக கிருஷ்ணசாமி இந்த வழக்கு தொடர்ந்துள்ளார். இனி இதுபோன்ற காரணங்களுடன் வழக்கு தொடர்வது கிருஷ்ணசாமி தவிர்க்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.