Categories
சினிமா தமிழ் சினிமா

கே.வி ஆனந்தின் உடல் தகனம் செய்யப்பட்டது – வெளியான தகவல்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. இந்நிலையில் அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமன்றி கொரோனாவால் பாதிக்கப்பட்ட தற்போது வரை திரை பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் பிரபல திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் (54) சற்றுமுன் காலமானார். கொரோனா பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சற்று முன் உயிரிழந்தார். இவர் அயன், மாற்றான், கவன், காப்பான், கோ, அனேகன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருந்ததால் அவரது உடல் வீட்டில் 5 நிமிடங்களுக்கு மட்டும் வைக்கப்பட்டது. மேலும் நேரடியாக பெசண்ட்  நகர் மின்மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து சற்று நேரத்தில் அவரது உடலுக்கு இறுதி சடங்கு நடத்தப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

Categories

Tech |