Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 7 பம்பு செட்டு…. வெளி ஆட்கள் நடமாட்டம் அதிகம் இருக்கு…. நடவடிக்கை எடுக்ககோரி புகார் மனு….!!

7 பம்பு செட்டுகளில் உள்ள மின் மோட்டார்களில் இருக்கும் ஒயர்களை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பெருமாநல்லூர் கிராமத்தில் ராமநாதன் என்ற ஊராட்சி மன்ற தலைவர் வசித்து வருகிறார். அதே ஊரில் அ.ம.மு.க  மூத்த நிர்வாகி வெங்கடேசன் என்பவரும் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர். அந்த புகார் மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது “பெருமாநல்லூர் பகுதியில் தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பம்பு செட்டுகள் உள்ளது.

இந்த பம்பு செட்டுகளில் உள்ள மின் மோட்டார்களில் பொருத்தப்பட்டிருந்த காப்பர் ஒயர்களை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். அதுபோல எங்கள் கிராமத்தில் மேலும் 7 மின் மோட்டார்களில் உள்ள ஒயர்கள்  திருடப்பட்டுள்ளது. மேலும் தங்கள் கிராமத்தில் வெளி ஆட்கள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் பல குற்றச் செயல்களும் நடைபெற்று வருகின்றது. இதற்கு தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என அதில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மின் மோட்டார்களில் உள்ள ஒயர்களை திருடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |