இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை நிலவரம் உறைய வைக்கிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியிலேயே ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதற்கு மத்தியில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் மும்பையில் தடுப்பூசி பற்றாக்குறையால் 3 நாட்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தபடுவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.