Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பழசுக்கு பதில் புதுசு… தொடங்கி வைத்த போலீஸ் சூப்பிரண்டு… தமிழக அரசு வழங்கியது…!!

 5 பழைய வாகனங்களுக்கு பதிலாக புதியதாக 5 வாகனங்களை அரசு காவல்துறையினருக்கு வழங்கியுள்ளது. 

தமிழக அரசு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த ஐந்து பழைய வாகனங்களுக்கு பதிலாக புதியதாக 5 வாகனங்களை வழங்கியுள்ளது. இந்த 5 புதிய வாகனங்களும்  காஞ்சிபுரம்  மாவட்டம் போலீஸ் சூப்பிரண்ட்  அலுவலகம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சண்முகப்பிரியா கொடி அசைக்க வாகனங்கள் இயக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு இரண்டு வாகனங்களும் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மூன்று வாகனங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் பல காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

Categories

Tech |