புதுக்கோட்டை மாவட்டத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை குண்டர் சட்டத்தில் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருக்கோகர்ணம் பகுதியில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியிலுள்ள பூ மார்கெட் பகுதியில் கத்தியை வைத்து மிரட்டி பொது மக்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளார். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் விஜய் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க காவல் துறையினர் மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரியிடம் பரிந்துரை செய்துள்ளனர். இதனையடுத்து கலெக்டர் அனுமதி வழங்கிய பின் விஜயை குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.