பிரேசில் நாட்டில் ஒரே நாளில் 77 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் கொரோனாவால் உலக அளவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் பிரேசிலும், மூன்றாவது இடத்தில் இந்தியாவும் உள்ளது. ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பிரேசில் நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது கவலையை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.
இந்நிலையில் பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் 3,019 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்த நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3.98 லட்சமாக அதிகரித்துள்ளது. அதேநேரம் புதிதாக 77 ஆயிரம் பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை பிரேசில் நாட்டில் 1.45 கோடியாக உயர்ந்துள்ளது.