கொரோனா தொற்று கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றியவாறு பூ வியாபாரம் செய்ய மாவட்ட கலெக்டர் அனுமதி அளித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரானா நோய் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர். இதனை அடுத்து காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வந்த பூக்கடை சத்திரம் வணிக வளாக பகுதியில் மக்கள் அதிகம் கூடுகின்றனர். எனவே அப்பகுதியில் பூ வியாபரம் நடத்த தடைவிதித்து மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் அதிரடியாக உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து பூ வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத வண்ணம் அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் தற்காலிக பூ வணிக வளாகத்தை அமைத்துள்ளனர். அதன் பின் மாவட்ட நிர்வாகத்தின் துணையுடன் அங்கு தடுப்புகள் அமைத்து கொரோனா விதிமுறைகளை பின்பற்றியவாறு பூ வியாபாரம் நடைபெற்றுள்ளது.