Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சாலையில் நிறுத்தப்பட்ட டிராக்டர்…. இரவோடு இரவாக நடந்த சம்பவம்…. சி.சி.டிவி கேமரா மூலம் சிக்கிய வாலிபர்….!!

டிராக்டரில் பொருத்தப்பட்டிருந்த பேட்டரியை திருடிய குற்றத்திற்காக வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.                               

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான டிராக்டரை சம்பவம் நடந்த அன்று தெருவில் ஓரமாக நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்தபோது டிராக்டரில் பொருத்தப்பட்டிருந்த ரூபாய் 5000 மதிப்புள்ள பேட்டரி திருடப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து கிருஷ்ணன் பாபநாசம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் இளமாறன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டிவி கேமரா மூலம் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் பாபநாசம் பகுதியில் வசிக்கும் சாகுல்ஹமீது என்பவர் பேட்டரி திருடிய தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சாகுல்ஹமீது என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த பேட்டரியையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |