கொரோனாவால் வேலை இழந்த நபருக்கு லாட்டரி சீட்டு பரிசு விழுந்துள்ளது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த Afsal Khalid என்பவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா சுழல் காரணமாக வேலை இல்லாததால் தனது சொந்த மாநிலமான கேரளாவுக்கு வந்துள்ளார். இந்நிலையில் துபாயில் டிஜிட்டல் லாட்டரி குழுக்கள் கடந்த 22ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் குழுக்களில் இருந்த பெயர்களில் இவரின் பெயரும் இருந்த நிலையில் அவருக்கு 300000 லட்சம் திர்ஹாம் விழுந்துள்ளது.
இதுகுறித்து Afsal Khalid கூறுகையில் நான் கடந்த ஒரு ஆண்டாக வேலை இல்லாமல் மிகவும் கவலையில் இருந்தேன் என்றும் எனக்கு இது கடவுள் கொடுத்த பரிசு எனவும் தெரிவித்துள்ளார். இதனிடையே கடந்த சனிக்கிழமை தன்னுடைய மின்னஞ்சலை பார்த்தபோது என்னால் நம்ப முடியவில்லை என்றும் இந்த பரிசை நான் சிறிதும் கூட எதிர்பார்க்கவில்லை. இது எனக்கு ரம்ஜான் பரிசு என்றும் இந்த தொகையை வைத்து சிறிய தொழில் தொடங்கி என் சொந்த ஊரிலேயே இருக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை என தெரிவித்துள்ளா.ர்