தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. மக்களும் தங்களுடைய வாக்கினை செலுத்தினர். இதையடுத்து தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தததையடுத்து வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின், “பெருந்தொற்றின் சூழலில் வாக்கு எண்ணும் இடங்களில் குவிந்து தொற்றுக்கு ஆளாகிவிட வேண்டாம். திமுக-வினருக்கு மட்டுமின்றி மாற்றுக் கட்சித் தோழர்களுக்கும் இது என் அன்பு வேண்டுகோள். கொண்டாட்டத்தைவிடவும் நம் அனைவரின் உயிர் முக்கியம். எனவே தேர்தல் வெற்றியை மக்கள் வீடுகளில் கொண்டாடுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.