சீனாவின் ஜேஜியாங் மாகாணத்தை லெக்கிமா புயலின் ருத்ர தாண்டவத்தில் இதுவரையில் 44 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் கிழக்கு பகுதியில் இருக்கும் ஜேஜியாங் மாகாணத்தை லெக்கிமா என்ற புயல் ருத்ர தாண்டவமாக புரட்டி போட்டது. இந்த புயலின் போது மணிக்கு 187 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியதால் 3000-த்திற்கும் மேற்பட்ட மரங்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்தன. தொடர்ந்து அங்கு பெய்துவரும் கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச் சரிவினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்குள்ள விமான மற்றும் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுவரையில் இந்த நிலச்சரிவில் சிக்கி 44 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 20,00,000- த்திற்கும் அதிகமான பொதுமக்களை மீட்பு குழுவினர் மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தி வருகின்றனர் என்று சீன அரசு தெரிவித்துள்ளது.