கனடாவில் காணாமல் போன 16 வயது தமிழ் சிறுமி குறித்த தகவல்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
கனடா நாட்டில் 16 வயதுடைய தமிழ் சிறுமி ஒருவர் காணாமல் போனது தொடர்பாக ரொறன்ரோ காவல்துறையினர் புகைப்படத்துடன் தகவலை வெளியிட்டுள்ளனர். அதன்படி கடந்த 29-ஆம் தேதி மதியம் 1 மணிக்கு தரணிதா ஹரிதரன் என்ற 16 வயது சிறுமி காணாமல் போயிருக்கிறார். மேலும் அந்த சிறுமி இறுதியாக மெக்லிவன் அவென்யூ மற்றும் தப்ஸ்கோட் சாலையில் இருந்துள்ளார்.
MISSING:
Daranita Haridharan, 16
– last seen Thurs, Apr 29 at 1pm
-Tapscott Rd + McLevin Av area
– described as 5’5, thin build, long black hair
– tattoo on L/arm “K”, “8” and a crown, nose pierced
– wearing a blue sweater, black pants, white shoes, grey Roots bag#GO786393
^lb pic.twitter.com/e78Xetk45U— Toronto Police Operations (@TPSOperations) April 29, 2021
அந்த சிறுமி ஒல்லியான உடல் அமைப்பு கொண்டவர் எனவும், ஐந்து அங்குலம் ஐந்து அடி உயரம் கொண்டவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அவருடைய இடது கையில் டாட்டூ குத்தியிருக்கும் என்று தெரிவித்த காவல்துறையினர் அவர் காணாமல் சென்றபோது அணிந்திருந்த உடைகள் குறித்தும் தகவல் தெரிவித்துள்ளனர்.