சுவிற்சர்லாந்தில் இன்றிலிருந்து பழைய சுவிஸ் பிராங் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சுவிற்சர்லாந்தில் 10, 20, 50, 100, 500 மற்றும் 1000 வரையிலான சுவிஸ் பிராங் பழைய நோட்டுகள் ரயில்வே, தபால் நிலையங்கள் போன்றவற்றில் மட்டும் அக்டோபர் 30ஆம் தேதி வரை ஏற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்பு பெர்ன், சூரிச்சிலிருக்கும் சுவிஸ் தேசிய வங்கியின் பணம் மாற்றக்கூடிய பிரிவுகளுக்கு சென்று மக்கள் தங்கள் பழைய நோட்டுகளை புது நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.