Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு…. மக்களே அலர்ட்டா இருங்க…..!!!!

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. அதனால் மக்களுக்கு குளிர்ச்சியை ஊட்டும் வகையில் கடந்த ஒரு மாதமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக வறண்ட வானிலை நிலவி வரும் நிலையில், மே 1,2 ஆகிய தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், சேலம், தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, நெல்லை, தென்காசி மற்றும் குமரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். மேலும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இயல்பை விட ஒன்று முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும் எனவும் எச்சரித்துள்ளது. அதனால் அடுத்த 2 நாட்களுக்கு மக்கள் வெளியில் வருவதை தவிர்க்கவும் எனவும், அவள் வெளியில் வருபவர்கள் குடை எடுத்துச்செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |