Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் வேலை செய்பவர்களுக்கு இனி….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அது மட்டுமன்றி பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி அமலுக்கு வந்தது. மேலும் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 26 ஆம் தேதி  முதல் பல கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் அரசின் உத்தரவை கடை பிடிக்காததால் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளதாக மருத்துவ வல்லுநர் பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார். கொரோனா அதிகரிப்பால், நிறுவனங்களில் பணியாற்ற குறைக்கப்பட வேண்டும். சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட வேண்டும். ஒன்றாகக் கூடி உணவு உண்பதை தவிர்க்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |