குழந்தைகள் விரும்பும் சுவையான உருளைக்கிழங்கு போண்டா செய்யலாம் வாங்க .
தேவையான பொருட்கள் :
கடலை மாவு – 250 கிராம்
பல்லாரி – 2
பச்சை மிளகாய் – 2
உருளைக்கிழங்கு – 250 கிராம்
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
கடுகு – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் உருளைக் கிழங்கை வேக வைத்து தோல் உரித்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் , எண்ணெய் ஊற்றி கடுகு , வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியை சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும் . பின் இதனுடன் வேகவைத்த உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து , பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி , கடலை மாவில் தோய்த்து, எண்ணெய்யில் பொரித்து எடுத்தால் சுவையான உருளைக்கிழங்கு போண்டா தயார் !!!