நடிகர் சிம்பு இயக்குனர் கே.வி.ஆனந்த் மறைவு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் கே.வி.ஆனந்த் இன்று காலை மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இந்நிலையில் நடிகர் சிம்பு கே.வி.ஆனந்த் மறைவுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘தொடர்ச்சியான மரணங்கள் அதிர்ச்சியை தருகிறது . மரணம் எதிர்பாராத ஒன்று தான் என்றாலும் நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பவர்களை, நம்மோடு தினமும் தொடர்பில் இருப்பவர்களை எதிர்பாராமல் இழப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அதிர்ந்து பேசாத நல்ல மனிதர் கே.வி.ஆனந்த் அவர்கள். கோ படத்தில் நான் நடித்திருக்க வேண்டியது. அப்போதிருந்த சூழலில் தவிர்க்கும்படி ஆகிவிட்டது. சமீபத்தில் மிக அருமையான கதை ஒன்றை எனக்குச் சொல்லியிருந்தார். சேர்ந்து படம் பண்ணலாம் என சொல்லி இருந்தேன். தினமும் என்னோடு தொடர்பில் இருந்தார். நேற்று வரை பேசிக் கொண்டிருந்தவர் இன்று அதிகாலை மரணமடைந்துவிட்டார் என்று சொல்வதை மனம் நம்ப மறுக்கிறது .
#RIPkvanandsir 💔 pic.twitter.com/siWJllzlHb
— Silambarasan TR (@SilambarasanTR_) April 30, 2021
பொய்ச் செய்தியாக இருக்க கூடாதா என அங்கலாய்க்கிறேன். இவ்வளவு சீக்கிரம் அவரை இழந்திருப்பது மிகுந்த வருத்தத்திற்குரியது. ஒளிப்பதிவாளர்கள் இயக்குனராகி வெற்றி பெற்றவர்களில் கே.வி.ஆனந்த் மிக முக்கியமானவர். நிச்சயம் பேசப்படும் நிறைய படங்களை அவர் தொடர்ந்து தந்திருப்பார் . அவசரமாக பயணித்து விட்டார் இறைவனிடம். திரைத்துறைக்கு அவரின் மறைவு பேரிழப்பு . அவரை இழந்து நிற்கும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என கூறியுள்ளார்.